ஆலோசனை நிலையங்கள்

சில ஆலோசனை நிலையங்கள் பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிக்கும் சமயம் மற்றைய நிலையங்கள் குறிப்பிட்ட தலைப்புக்கு அல்லது வாழ்வின் பிரச்சனைகளுக்கு மட்டுமே நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். இந்த வசதி வாய்ப்புகள் வாழும் பிரதேசத்திற்கேற்ப மாறுபடும் வழமையாக முதலாவது ஆலோசனை இலவசமானது. அதிகமாகத் தொடர்ந்தும் இலவசமாகலாம். அதிகமான இடங்களில் வெளிநாட்டு மொழிகளிலும் ஆலோசனை பெறலாம்.

பொதுவான ஆலோசனை நிலையங்கள்

பிராட்டெல்னில் உள்ள வெளிநாட்டவர் சேவை மையம் (ald) வெளிநாட்டவர்களுக்கான மத்திய ஆலோசனை நிலையமாகும். இங்கு வேலை செய்பவர்கள் தினமும் எந்நேரமும் பொதுவான கேள்விகளுக்குப் பதிலளிப்பதுடன் அவர்களுக்குத் தேவையான விசேட ஆலோசனை நிலையங்களைத் தேடிக் கொடுப்பார்கள். அதைவிட தேடுபவர்களுக்குப் பொருத்தமான டொச்மொழி வகுப்புகளையும் உள்வாங்குதல் வசதிவாய்ப்புகளையும் செய்து கொடுப்பார்கள். முதலே பேசி உடன்பட்டால் (தொலைபேசி அல்லது நேரடியாக ) வேற்றுமொழிகளிலும் பேசலாம். தகவல்களும் ஆலோசனையும் இலவசம். Anlaufstelle Baselland தொடர்பு மையம் புகலிடம் மற்றும் குடிவரவு சட்டம் தொடர்பான அனைத்து கேள்விகள் பற்றிய தகவலை வழங்குகிறது.

இதைவிட பொதுவான ஆலோசனை நிலையம், இவ்வாலோசனைகள் குறிப்பிட்ட பிறமொழியில் நடைபெறும் அல்லது குறிப்பிட்ட வாழிடப்பிரிவுக்கு பொறுப்பானதாக இருக்கும். இதைவிட வெளிநாட்டினர் கழகங்களும், முதலாவது தகவல்களை சொந்த மொழியில் வழங்குவதால் ஒரு நல்ல இடமாக உள்ளது.

கிராமசபை நிர்வாகம் / நகரசபை நிர்வாகம்

அதிகமான சந்தர்ப்பங்களில் வதிவிடங்களின் நிர்வாகங்களே (கிராமசபை நிர்வாகம், Gemeindeverwaltung / நகரசபை நிர்வாகம், Stadtverwaltung) முதலாவது சிறந்த தொடக்க நிலையமாகும். இங்கு வேலைசெய்பவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு நேரடியாகப் பதில் தருவார்கள் அல்லது அதற்கென உள்ள ஆலோசனை நிலையத்திற்குப் பரிந்துரை செய்வார்கள். Basel-Landschaft மாநிலத்திலுள்ள அனைத்துக் கிராமசபைகளுக்கும் சொந்தமாக ஒரு இணையத்தளம் உண்டு. அதில் தொடர்பு விபரங்கள் திறந்திருக்கும் நேரங்களும் மேலதிக தகவல்களும் ஆலோசனை மற்றும் உள்வாங்குதல் சம்பந்தமான பிரதேசவாரியான ஒரு பகுதி நிரல்களும் இருக்கும்.

நிபுணத்துவம் பெற்ற ஆலோசனை நிலையங்கள்

பாசில் பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட தலைப்பிலோ அல்லது எதாவது வாழ்க்கைப் பகுதியிலோ நிபுணத்துவம் பெற்றவர்களைக் கொண்ட ஆலோசனை நிலையங்களின் வசதிகள் பரந்து காணப்படுகிறது. உதாரணத்திற்குச் சில: வயோதிபர்.தொழில் வதிவிட அனுமதி கல்வி திருமணம், விவாகரத்து, வளர்ப்பு, குடும்பம், நிதி (கடன் / திட்டமிடல் ), சுகாதாரம், வீட்டு வன்முறை உள்வாங்குதல், உளப்பிரச்சனைகள், சிசுக்கள் பராமரிப்பு, பாலியல், அடிமையாதல், சமூகஉதவி சம்பந்தமான கேள்விகள் .இந்த வசதி வாய்ப்புகள் பிரதேசத்திற்கேற்றபடி மாறுபடும். சில சலுகைகள் இரு-மாநிலங்களாக ஒழுங்கமைக்கப்படுகின்றன மற்றும் பல சந்தர்ப்பங்களில் Basel-Stadt இல் உள்ளன. Basel-Landschaft மாநிலத்தில் உள்ளவர்களுக்கும் சலுகை கிடைக்குமா என்பதை ஆன்லைனில் முன்கூட்டியே தெரிந்துகொள்ளுங்கள். முதல் ஆலோசனை வழக்கமாக இலவசமானது. ஒரு சில ஆலோசனை நிலையங்களின் தொடர்பு விபரங்கள் தனியான தலைப்புகளில் hallo-baselland.ch இல் காணலாம். வெளிநாட்டவர் சேவை பாசில் லாண்ட் (ald) இலோ அன்றி வதியும் கிராமசபையிலோ பொருத்தமான ஆலோசனை நிலையங்களைத் தேடலாம்.

டொச் மொழி நன்றாகப் பேசத்தெரியாதவர்களுக்கு ஆலோசனை நிலையத்திற்குப் போக முன்பே மொழிபெயர்ப்பு வசதிகள் பற்றி தகவல் தருவார்கள். ஆலோசனை வேறு மொழிகளில் தரப்படலாம். அல்லது உரையாடல் மொழிபெயர்ப்பாளரை ஏற்பாடு செய்து தரப்படலாம். அல்லது சொந்தமாக ஒரு மொழிபெயர்ப்பாளரை அழைத்துவரச் சொல்லலாம்

துவேச அவமதிப்பு

Basel-Landschaft மற்றும் Basel-Stadt மாநிலங்கள் STOPP இனவாதத்துடன், பாகுபாடு மற்றும் இனவெறி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட அல்லது அத்தகைய பாகுபாடுகளைக் கடைப்பிடித்த மக்களுக்கான ஆலோசனை மையத்தை வழங்குகின்றன. ஆலோசனை இரகசிய தன்மை கொண்டது மற்றும் இலவசமானது.தனிப்பட்ட ஆலோசனைகள் மற்றும் ஆன்லைன் ஆலோசனைகள் அல்லது தொலைபேசி மூலம் ஆலோசனைகள் சாத்தியமாகும்.