பெற்றோர்த்துவம் மற்றும் குடும்பம்

எவருக்கு பிள்ளைகள் உள்ளதோ, அவர்கள் பிள்ளைகள்- மற்றும் கல்விக்கொடுப்பனவுகள் மூலம் ஆதரிக்கப்படுகிறார்கள். தொழில் புரியும் பெண்கள் அவர்களின் குழந்தைப்பிறப்பிற்கு பின்பு குறைந்தது சம்பளத்துடன் கூடிய 14 வார மகப்பேறுவிடுமுறைக்கு உரித்துடையவர்.

மகப்பேறு உதவித்தொகை

பெண்கள், வேலைசெய்யும் காலத்தில் குழந்தை பிரசவித்தால் பெரும்பாலும் அவர்களுக்கு 14 வார மகப்பேற்று விடுமுறைக்கு (Mutterschaftsurlaub) உரிமையுள்ளவராகிறார். இந்தக்காலப்பகுதியில் அவர்களுக்கு குறைந்தது 80% சம்பளம் கொடுக்கப்படும். வேலையிழந்த அல்லது வேலை செய்ய முடியாத பெண்கள் தமது கிராமசபைக்கிளையிலுள்ள சமூககாப்புறுதி நிறுவனத்தில் (Gemeindezweigstelle der Sozialversicherungsanstalt SVA) தமக்கும் சந்தர்ப்பம் உண்டா என விசாரிக்கலாம். இங்கு விசேட விதிமுறைகளுள்ளன. குழந்தை பிறந்து முதல் 8 வாரங்களுக்கு தாயார் வேலை செய்யக்கூடாது (தாய்மைப்பாதுகாப்பு).

மற்ற பெற்றோருக்கான கொடுப்பனவு

குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, மற்ற பெற்றோருக்கு (குழந்தையின் தந்தை அல்லது தாயின் மனைவி) 2 வார கால ஊதியத்துடன் கூடிய விடுப்புக்கு உரிமை உண்டு. இந்தக் கொடுப்பனவு, அதிகபட்சம் 14 நாட்களுக்கு அவர்களது ஊதியத்தை ஈடுசெய்யும் வகையில் வழங்கப்படும். மற்ற பெற்றோர் இந்த 2 வார விடுப்பை ஒரே தவணையிலோ அல்லது தனித்தனி நாட்களாகவோ எடுத்துக்கொள்ளலாம், இருப்பினும், குழந்தை பிறந்த 6 மாதங்களுக்குள் இந்த விடுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும்.

குடும்பக்கொடுப்பனவு

எவருக்கு குழந்தைகள் உள்ளனவோ அவர்களுக்கு குடும்பக்கொடுப்பனவு (Familienzulangen) பணரீதியாக உதவுகிறது. இவை பிள்ளைகள் 16 வயதுவரை பிள்ளைகள் உதவித்தொகையாகவும் இளையோர் மேற்படிப்புக்காலம் 25 வயதுவரை பயிற்சி உதவித்தொகையாகவும் வழங்குகிறது. இதற்கு வேலை செய்யும் (சொந்தத்தொழில் உட்பட) பெற்றோர் மற்றும் வேலை இல்லாத குறைந்த வருமானமுள்ள பெற்றோருக்கும் உரிமையுள்ளது. வேலை செய்பவர்களுக்கு இது மாதசம்பளத்துடன் கொடுக்கப்படும். குடும்பக்கொடுப்பனவு பற்றிய மேலதிக தகவல்களை தொழில் வழங்குனர் அல்லது கிராமசபைகிளையிலுள்ள சமூககாப்புறுதி நிறுவனத்தில் பெறலாம். குடும்பக்கொடுப்பனவின் தொகை மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசப்படும்.