ஓய்வு நேரம்

Basel-Landschaft மாநிலத்தில் ஓய்வு நேரத்தை களிப்பதற்கு பல கவர்ச்சியான வசதிகள் உள்ளன. இதில் முக்கியாமானவை கழகங்களாகும். இவை வௌ;வேறு மனிதர்களை அறிந்துகொள்ள சந்தர்ப்பங்களை வழங்குகின்றன.

கழகங்கள்

Basel-Landschaft மாநிலத்தில் அதிகமான குடியிருப்பாளர்கள் ஏதோ ஒரு கழகத்தில் (Verein) அங்கத்தவராயிருப்பார்கள்.பல வகைப்பட்ட ரசனைக்கேற்ப அதிக கழகங்கள் உள்ளன. சிறிய கிராமசபைகளில் கூட விளையாட்டு - கலாச்சாரம் மேலும் பல கழகங்கள் உள்ளன. அவை மனிதர் ஒருவரோடொருவர் தொடர்பு கொள்ள சிறந்த சந்தர்ப்பங்களை ஏற்படுத்துகின்றன.அதிகமான கழகங்கள் அனைத்து மக்களுக்காகவும் திறந்துள்ளன. கழகங்கள் பற்றிய தகவல்களை கிராமசபைகளின் இணையத்தளங்களில் தேடலாம்.

இளையவர்களுக்கான வசதிகள்

Basel-Landschaft மாநிலத்திலுள்ள இளையவர்கள் தமது ஓய்வு நேரத்தைக் கழிக்கவும் தமது வயதையொத்தவர்களுடன் பழகிக் கொள்ளவும் எனப் பல விசேட வசதிகள் உள்ளன. அதிகமான கிராமசபைகளில் ஓய்வு நேரச் சலுகைகளுடன் கூடிய சந்திப்புக்கள் உள்ளன. இங்குள்ள இளையவர்களைப் பராமரித்து அவர்கள் எண்ணங்களைச் சேர்த்து செயற்திட்டமாக்குவார்கள் (Jugendarbeit). இச் சலுகை வழக்கமாக இலவசமானது. இளைஞர் அமைப்புகளில் ஒரே வயதினர் சேர்ந்து தடகள இயற்கை விளையாட்டுக்களில் பங்கெடுப்பார்கள். இதைக் கழகங்கள் கிராமசபைகள் அல்லது தேவாலயங்கள் நடத்தலாம். இந்த சலுகைகள் அனைத்து இளையோருக்கும் உரியது. வதியும் கிராமசபைகளில் மேலதிக விபரங்களை அறியலாம்.

சுற்றுலாவும் கலாச்சாரமும்.

Basel-Landschaft மாநிலம் பலவிதமான சுற்றுலாவசதிகளையும் பெருமளவு கலாச்சார வசதிகளையும் ஏற்படுத்திக்கொடுக்கிறது. தனித்துவமான யூரா நிலப்பரப்பில் பல அழகான மலையேறும் பயணங்களும், மிதிவண்டி சுற்றுலாக்களும் உள்ளன. எடுத்துக்காட்டாக, ரோமானிய நகரமான Augusta Raurica , "Wasserfallen" பகுதி அல்லது ரயின் நதியைப் போலவே Basel-Landschaft மாநிலத்தைச் சேர்ந்த பல அரண்மனைகள் மற்றும் கோட்டைகள் பிரபலமான சுற்றுலா இடங்கள் ஆகும். Baselland சுற்றுலா, உல்லாசப் பயணங்கள் மற்றும் நிகழ்வுகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது. தற்போதைய கலாச்சார நிகழ்வுகள் பற்றிய தகவல்களை உள்ளூர் செய்தித்தாள்களிலும் காணலாம்.

விரும்பிவேலைசெய்தல்

விரும்பிவேலைசெய்தல் (Freiwilligenarbeit) என்பது மனிதர்களுக்கும் சூழலுக்கும் இலவசமாக வழங்கும் சமூகரீதியான அர்ப்பணிப்பு. பெருமளவு வேலைகள் சுவிசில் பாரம்பரியமாக விரும்பி வேலை செய்யப்படுகின்றன. பெரும்பாலான வேலைகள் கழகங்களுக்குள் செய்யப்படுகின்றன. இதன்மூலம் கழகங்கள் கலாச்சாரம், விளையாட்டு, சமூக நலன்கள், கல்வி, மிருகங்கள்- மற்றும் சுற்றாடல்பாதுகாப்பு, சுகாதாரம் மறறும் பல வகைகளிலும் ஈடுபடுகின்றன. விரும்பி வேலை செய்பவர்கள் மற்றும் வேலைசெய்யும் சந்தர்ப்பங்கள் பற்றிய தகவல்களை விரும்பி வேலைசெய்யும் விசேடநிலையம் Benevol, சுவிஸ் செஞ்சிலுவைச்சங்கம் Baselland ல் (SRK) அல்லது இரண்டு பாசிலுக்குமான காரிடாஸ் (Caritas beider Basel) பெற்றுக்கொள்ளலாம்.

விளையாட்டு ஃ கலாச்சாரம்ஃகல்வி

Kulturlegi உடன் - வருமானம் குறைந்தவர்களுக்கு கிடைக்கும் இந்த அடையாள அட்டையுடன் விளையாட்டு - கலாச்சார - கல்வி நிகழ்ச்சிகளில் குறைந்த செலவில் பங்குபற்றலாம். இந்த அடையாள அட்டைக்கு கரித்தாஸில் விண்ணப்பிக்கலாம். கரித்தாஸ் விண்ணப்பத்தைப் பரிசோதித்த பின்பு முரடவரசடநபi பெறத் தகுதியுள்ளவரா என்பதை அறிவிக்கும். மேலும் ஒரு சலுகையாக, குடும்ப பாஸ் (Familienpass) வடமேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள குடும்பங்களுக்கு பரந்த அளவிலான தள்ளுபடிகள் அல்லது இலவச சலுகைகளை வழங்குகிறது. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் இளைஞர்களுக்கு "வண்ண சாவி" அல்லது விடுமுறை பாஸ் (விடுமுறை பாஸ்) போன்ற ஏராளமான தள்ளுபடிகள் மற்றும் இலவச சலுகைகள் உள்ளன. குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் இளம் வயதினர்களுக்கு "வண்ண சாவி"(Colour Key) அல்லது விடுமுறை பாஸ் (Ferienpass) போன்ற ஏராளமான தள்ளுபடிகள் மற்றும் இலவச சலுகைகள் உள்ளன.