திறந்திருக்கும் நேரங்கள் / விடுமுறை நாட்கள்

சுவிஸில் அதிகமான கடைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டியிருக்கும். இதற்கு புகையிரத நிலையத்திலுள்ள கடைகள் மட்டும் விதிவிலக்காகும். சட்டப்படியான விடுமுறை நாட்களை மாநிலமே ஒழுங்கு செய்யும்.

விடுமுறை நாட்கள்

விடுமுறை நாட்கள் தொழிற்சட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன மேலும் அவை சட்டபூர்வமாக ஞாயிற்றுக்கிழமைக்கு சமமானவை. 1 ஆகஸ்ட் (தேசியவிடுமுறை நாள் ) சுவிஸ் முழுவதற்குமான சட்டப்படியான விடுமுறைநாள். அதை விட ஒவ்வொரு மாநிலத்திற்கும் 8 மேலதிகமான சட்டப்படியான விடுமுறை நாட்கள் உள்ளன. Basel-Landschaft மாநிலத்தில் பின்வரும் நாட்கள் பொது விடுமுறை நாட்களாகும்: புதுவருடம் (1. ஜனவரி) பெரியவெள்ளி (ஈஸ்ரருக்கு முந்தைய வெள்ளி), ஈஸ்ரர் திங்கள், தொழிலாளர் தினம் (1. மே), மோட்சத்திருநாள் (ஈஸ்ரர் திங்களுக்கு 40 நாட்களின் பின்புவரும் வியாழன்), வெள்ளைத் திங்கள், தேசிய விடுமுறைநாள் (1. ஆகஸ்ட்), கிறிஸ்துமஸ் (25. டிசம்பர்), ஸ்டீபன் நாள் (26. டிசம்பர்).

கடைகள் திறந்திருக்கும் நேரங்கள்

கடைகள் திறந்திருக்கும் நேரங்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். Basel-Landschaft மாநிலத்தில் திறந்திருக்கும் நேரங்கள் அரசால் நிர்ணயிக்கப்படவில்லை. பெரும்பாலான மளிகைக் கடைகள் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8 மணி முதல் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இருப்பினும், இந்த நேரங்கள் கடையைப் பொறுத்து மாறுபடலாம் மற்றும் குறுகியதாகவோ அல்லது நீண்டதாகவோ இருக்கலாம். சனிக்கிழமைகளில் கடையை வார நாட்களைவிட முன்பே பூட்டுவார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான கடைகள் பூட்டியிருக்கும். விதிவிலக்காகப் புகையிரதநிலையக் கடைகள் அல்லது பெட்ரோல் நிலையக் கடைகள் சாதாரணமாக 7 நாட்களும் திறந்தும் மற்றைய கடைகளைவிட அதிகமாக முந்தித்திறந்தும் பிந்திப்பூட்டியும் இருக்கும்.

அரச நிர்வாகங்கள் திறந்திருக்கும் நேரங்கள்

மாநில நிர்வாகங்கள் வழமையாக திங்கள் முதல் வெள்ளி 8 -12 மணி வரையும் 14 -17 மணி வரையும் திறந்திருக்கும். சில இடங்கள் பிற்பகல் 13.30 மணிக்குத் திறந்தும் அல்லது தொலைபேசியில் கூடிய நேரத்திற்கு தொடர்பு கொள்ள வசதியுமிருக்கும். கிராமசபை நிர்வாகங்கள் திறந்திருக்கும் நேரங்கள் வித்தியாசப்படும். எல்லாவற்றையும்விட ஆகச்சிறிய கிராமசபை நிர்வாகங்கள் திறக்கும் நேரங்கள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கும். முதலே இணையத்திலோ அன்றி தொலைபேசியிலோ திறந்திருக்கும் நேரங்கள் பற்றி அறிந்து கொள்ளச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது.