வீட்டு மிருகங்கள்

எவர் வீட்டு மிருகங்கள் வைத்திருக்கிறாரோ அவர் பலவித விதிகளைக் கவனிக்க வேண்டும். சில மிருக வகைகளை எல்லாக் குடியிருப்புகளிலும் வைத்திருக்க முடியாது. நாய்களை வளர்ப்பதற்கு கிராமசபை கட்டணம் வசூலிக்கலாம்.

வீட்டு மிருகங்களை வளர்த்தல்

எவர் வாடகை வீட்டில் குடியிருக்கிறாரோ அவர் கினி பன்றி, வெள்ளெலி கனரிப்பறவை மீன்கள் போன்ற சிறிய வீட்டு மிருகங்களை வளர்க்க முடியாது. பெரிய மிருகங்களான சிறிய நாய் பூனை ஆகியவற்றையும் வளர்க்கக்கூடாது எனவும் வாடகை ஒப்பந்தத்தில் சில வேளை போட்டிருக்கலாம். சத்தம் போடும் அல்லது ஆபத்து விளைவிக்கும் மிருகங்களையும் வீட்டுக்காரர் தடை செய்யலாம். அதை விட மிருகங்களை வளர்ப்பவர்கள் மிருகப்பாதுகாப்புச்சட்டத்தைக் கவனிக்கவேண்டும். உதாரணத்திற்குச் சில மிருகங்களைத் தனியே வளர்க்கக்கூடாது (முயல் ). வளர்க்கும் கூடுகள் குறைந்தபட்சத் தேவையையும் மற்றும் தேவையான வசதிகளையும் கொண்டிருக்க வேண்டும். அதிக வித்தியாசமான விலங்குகளை சுவிசிற்குள் கொண்டுவரமுடியாது. அதைவிட அதற்கு விசேடமான அனுமதி கால்நடை இலாகாவில் பெறவேண்டும்.

நாய்கள்

Basel-Landschaft மாநிலத்தில் நாய்களுக்கு விசேட சட்டமுண்டு. அதனுள் நாய் வளர்ப்பவர்களுக்கு என்ன பொறுப்புகள் உண்டு என எழுதப்பட்டுள்ளது. மேலதிக தகவல்களை மிருகவைத்தியரிடம் அறிந்து கொள்ளலாம்.

  • சுவிஸில் எல்லா நாய்களுக்கும் ஒரு நுண்தகட்டில் அதன் அனைத்துத் தகவல்களும் பதியப்பட்டிருக்கும். நாய்க்கு ஒரு நாய் அடையாளஅட்டை (கிறடிட் காட் போல) இருக்கும். இது வீட்டு மிருகம் என்ற அடையாளத்திற்கு அல்ல. இந்த அட்டையுடன் ஐரோப்பிய நாடுகளுக்குள் நாயையும் கூட்டிச்செல்லலாம்.
  • நாய்களைக் கிராமசபையில் பதியவேண்டும். நகராட்சிகள் நாய்களுக்கு கட்டணம் வசூலிக்கலாம். ஒவ்வொரு நாயையும் வளர்ப்பதற்கு கட்டாயப் பொறுப்புக் காப்பீடு (Haftpflichtversicherung) எடுக்கப்பட வேண்டும்.
  • நாயை வளர்ப்பவர் அதன் மலத்தை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும். யார் இதைச் செய்யாமல் விட்டாலும் அபராதப்பணம் மூலம் தண்டிக்கப்படுவர்.
  • ஒரு சில நாய் இனங்களை ( பிட்புல். றொட்வைலர் ) வளர்க்க விசேட அனுமதி பெற வேண்டும்.